Sunday, May 8, 2011

மோகினி ராகம், ஆவி தாளம், திராகுலாஜர் கீர்த்தனை















என் அம்மா ஒரு சிறந்த பாடகி. அவரிடமிருந்து லேசாக பாட்டு வாசனை எனக்கும் உண்டு.

நல்ல இசையை பற்றி, பாட்டு நன்கு தெரிந்தவர்கள் எழுதட்டும். நான் தெரியாதவர் வாயில் சிக்கி பாட்டு படும் பாட்டை பற்றி எழுத விழைகிறேன்.

என் பம்மல் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் நான் முதலில் பாட்டை எப்படிஎல்லாம் துஷ்ப்ரயோகம் செய்ய முடியும் என்பதை அதிர்ந்தேன்.

காலை ஆறு மணிக்கு என் எதிர் வீட்டு மனிதன் எழுந்தான் என்றால் தெருவே அலறும். வீட்டு வாசலில் வந்து பல் தேய்க்க ஆரம்பிப்பார். வாயில் பேஸ்ட்டுடன் ஓரிரு பாடல் பாடுவார். இழையம் ஒழு க்ஹோயில், காழலிட் ழீபம் ஒழ்று இரண்டும் மிகவும் ப்ரஷி(brush)த்தமான பாடல்கள். பேஸ்ட் சாதகம் முடிந்ததும் அவரது முழு திறமையும் இழைத்து ஒரு TMS பாட்டு எடுத்து விடுவார். காக்கைகள் migration செய்து நாங்கள் அப்போதுதான் பார்த்தோம். கூட்டம் கூட்டமாய் அலறிப்பறக்கும். என் பக்கத்துக்கு வீட்டு மாமி அப்போது பார்த்து காக்கைக்கு சாதம் வைத்து கூப்பிடப்போய் பெரிய அமர்க்களம். world trade center அட்டாக் மாதிரி பல காக்கைகள் அவர் வீட்டுக்குள் புகுந்து சில பல சாதனங்களை தகர்த்தி விட்டு பறந்து மறைந்தன.
பாட்டும் நானே சிவாஜிக்கு பிறகு ஒரு பாட்டுக்கு அவ்வளவு effect கொடுத்தது இந்த மனிதராகத்தான் இருக்கும்.

அதற்கு பிறகு நான் குவைத்தில் ஒரு சிறுவன் பாடி கெட்டிருக்கிறேன் ( கெ தான். no spelling mistake). எந்த தமிழ் சங்க ப்ரோக்ராமிலும் துணிந்து பாடுவான். மைக்கை லூசாக பிடித்து ஆட்டிய படி நாலு புறமும் நோட்டம் விட்டபடியேதான் பாடுவான். ஒருவருக்கும் அவனிடம் நெருங்க தைரியம் கிடையாது. ஒரு பாடலை பல ராகத்தில் - என்று ஒரு famous SPB பாடல் உண்டு. ஆனால் அதை அப்படியே implement பண்ணியது இந்த பையன்தான். அட, எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று நினைத்து முடிப்பதற்குள், அதற்கு சற்றும் சம்மந்தம் இல்லாத ரேஞ்சில் சஞ்சரிப்பான். பாடி முடித்ததும் கர கோஷம் விண்ணை பிளக்கும் (அப்பாடி, இனி அடுத்த ப்ரோக்ராமில்தான் வருவான்!).

என் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு மாது கர்நாடிக் பாட்டு கற்று கொடுக்கிறார். அசரீரி அசரீரி என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அது என்னவென்று முழுதாய் தெரியாது. அவரது ஒரு பாட்டு கேட்டால் எனக்கு இந்த அசரீரி ஞாபகம் வரும். சம்போஓஓஒ... என்று ஒரு பாட்டு. சாதுவாக ஆரம்பித்து பல ஸ்தாயிகள் மேலே போகும். கிளைமாக்ஸ் சம்போஓஓஒ... வில் பில்டிங்கே அதிரும். மேல் ப்ளோரில் ஒரு வயதான பாட்டி போயே சேர்ந்து விட்டார். என் மகள் இந்த பாடலைதான் மோகினி ராகம், ஆவி தாளம் என்பாள்.
சிவனுக்கு கோபம் வந்தால் ஆடுகிறார்போல், என் நண்பன் சுரேஷ் கோபம் வந்துவிட்டால் பயங்கரமாக பாட ஆரம்பித்து விடுவான். கர்நாடிக் சுத்தமாய் கற்று கொள்ளாமலே ராக ஆலாபனையில் பின்னுவான். சில பல பஜங்கர கீர்த்தனைகளுக்கு பிறகு - இன்னொரு நாள் பாடறேன் மச்சி, இன்னிக்கு குரல் கொஞ்சம் சரி இல்லை என்பான். ஆனால் அந்த எச்சரிக்கையை கேட்பதற்கு அங்கு ஒரு பயல் இருக்க மாட்டான். அடுத்த நாள் ரோட்டில் பார்த்தால் சொல்வார்கள் - மச்சி, நான்தான் சொன்னேனே, அவன்கிட்ட வச்சுகாதன்னு, கேட்டியா? நான் சொல்வேன் - இல்லடா, முழுசா கேக்கலை, பறந்துட்டேன்.
பாட்டும் நானே - பாவம் நீயே ....

5 comments:

  1. suuuuper post!! very hilarious..
    //ஆனால் அதை அப்படியே implement பண்ணியது இந்த பையன்தான். // idhu too much :))

    இந்த "போ சம்போ" பாட்டு குவைத்துல ரொம்ப பேமஸ் . என் மகளோட பாட்டு டீச்சர் அவங்ககிட்ட கத்துக்கற நண்டு சிண்டெல்லாம் சேர்த்து இந்த பாட்டை குவைத் தியாகராஜர் ஆராதனை விழாவில் பாட வைத்தார். அரை டிக்கெட்டெல்லாம் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடியதில் ரசிகாஸ் எல்லாம் ஜன்னி கண்டு துண்டை காணும் துணியை காணும்னு எஸ்கேப் ஆனது தான் ஞாபகத்துக்கு வருது. பேசாம தலைவரோட சிவ சம்போ பாட்டையே பாடியிருக்கலாம்..

    ReplyDelete
  2. இதயம் ஒரு கோவில் பாட்டை மறக்காமல் சொல்லியிருக்கியே (ஜென்மத்துக்கும் மறக்க முடியாத மாதிரி இல்ல பாடினார் எதிர் வீட்டு பையன்). மோகினி ராகம், ஆவி தாளம் --- சூப்பர்.

    ReplyDelete
  3. brought back funny memories.. எதிர் வீட்டு அதிர்வெடியை தெரியாமல் போச்சே?

    எப்பவோ படிச்ச ஒரு ஜோக்:
    : நான் பாடுறப்பல்லாம் எதுக்கு வெளியே எழுந்து போயிடறீங்க?
    : பெண்டாட்டியை அடிக்கிறவன்னு என்னைப் பத்தி ஊர்ல சொல்லிறக்கூடாது பாரு

    க்ருஷ்னா நகரில் இந்தி டீச்சர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பாட்டு க்லேஸ் தொடங்கியவரை நினைவிருக்கா? திடீரென்று அவரை மொத்து மொத்தென்று அடிக்க வந்தவர்களைப் பார்த்தபின் தான் விஷயம் தெரிந்தது. பசங்க கிட்டே fees வாங்கிட்டு, யாரோ பாடின ஒரு கேசட் டேப்பைப் போட்டு கேக்கச்சொல்லி பாடம் சொல்லிக் கொடுத்தாராம் அந்த ஆள்.

    ஆவி தாளம் சிந்தாளம்மன் கோவிலிலும் அதற்கு முன்னால் பம்மல் ஏரிக்கரை சித்ரா பௌர்ணமி பேயோட்டு விழாவிலும் கேட்டிருக்கிறேன். பேய் பிடித்தவர்களும் பேய் ஓட்டுவோரும் சேர்ந்து டூயட் பாடுவார்கள். எலஎலபோலல்ல என்று கிழவிகள் பின்பாட்டு வேறே!

    ஹ்ம்ம்ம்.. those days!

    great caption!

    ReplyDelete
  4. //" என்பதை அதிர்ந்தேன்'// //"மிகவும் ப்ரஷி(brush)த்தமான பாடல்கள். பேஸ்ட் சாதகம் முடிந்ததும்"// //"பாடி முடித்ததும் கர கோஷம் விண்ணை பிளக்கும் (அப்பாடி, இனி அடுத்த ப்ரோக்ராமில்தான் வருவான்!)"//

    ரசித்த சில (பல?) வரிகள்....!

    ReplyDelete
  5. படிச்சாலே கொல நடுங்குது.... ;-)))

    ReplyDelete