
எங்கள் தாத்தா எங்களுக்கு பெரிதும் கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டி கொடுத்தார் பம்மலில். மனிதர் பட்ஜெட்டில் படு கெட்டி. எதுவுமே material வாங்காமல் எப்படி வீடு கட்டுவதென்பது அவருக்கு மட்டுமே தெரிந்த கலை.
மேஸ்திரி: சார், சிமெண்டி ஒரு 10 மூட்டை வேணுமா இருக்கு..
தாத்தா: எதுக்கப்பா போன வாரம்தானே வாங்கினோம்?
மே: சார், அது போன வார வேலைக்கு சார்...
தா: அட, அதே வீடு கட்ற வேலையைதானேப்பா இப்பவும் பண்றே?
மே: சார்.. சார்.. என்னோட வேலை அதேதான். ஆனா வீடு, கட்ட கட்டத்தானே மேலே வரும்?
தா: டேய், நான் இத மாதிரி 15 வீடு கட்டியிருக்கேண்டா ..
மே: (மனதில் முன முனக்கிறார்: அப்புறம் எப்ப கலைச்சீங்க? பீச்ல தானே?)
தா: என்னடா, முன முனக்குரே? அவ்வளவும் ச்சாந்தாக்கும்.. ஒரு பொட்டு சிமெண்ட் கிடையாது..
இந்த ச்சாந்து என்பது என் தாத்தாவின் invention. வெறும் மண்ணை பிசைந்து பிசைந்து சிமெண்டாக மாற்ற முனைவது. பெரிய சிமெண்ட் பாக்டரி ஓனர்கள் பார்த்திருந்தார்கள் என்றால், எப்பொழுதோ என் தாத்தா patent வாங்கி hotmail சபீர் பாட்டியா மாதிரி வந்திருப்பார் (நான் இப்போ இப்படி கண்டவனுக்கு வேலை பார்க்காமலிருக்க வேண்டியிருக் காது).
இப்படியே சமாளித்து முழு வீட்டையும் கட்டி விட்டார். மேஸ்திரி மண்ணை பிசைந்து பிசைந்து படக் என்று ஒரு நாள் மண்ணில் கால் மாட்டி போயே சேர்ந்து விட்டார். விடாமல் அவரது மகனை வைத்து தாத்தா வேலையை முடித்தார். மேஸ்திரி மகன் பின்னால் பெரிய சிமெண்ட் பாக்டரி ஓனராக ஆகி விட்டதாக கேள்வி (patent திருடு).
நாள் ஆக ஆக இந்த ச்சாந்து தன் வேலையை காட்ட தொடங்கியது. ஒரு இரண்டு வருடத்தில் என் வீட்டில் நாங்கள் படிக்க map வாங்குவதை நிறுத்தி விட்டோம். எந்த country map ஆக இருந்தாலும் எங்கள் வீட்டு சுவரில் immediate ஆக கிடைக்கும்.
: அம்மா, அமேரிக்கா map வேணும்..
: kitchen right மூலைல இருக்குடா..
: ஆப்பிரிக்கா?
: நேத்துதானே சொன்னேன்? ஹால் ஜன்னல் மேல பாரேண்டா..
இதனால் geographyல் நாங்கள் எல்லோரும் first மார்க்தான்.
காலையில் எழுந்ததும் தாத்தா வீட்டை ஒரு ரௌண்டு விடுவார். அங்கங்கே தட்டி தட்டி பார்ப்பார். செத்துப்போன மேஸ்திரிக்கு தினமும் ஒரு இருபது திட்டு விழும். "கடன்காரன், சரியாய் மிக்ஸ் பண்ணாம போய் சேர்ந்துட்டான்.."
மழை காலம் வந்தால் எங்களுக்குள் பெரிய argument வரும். "வெளியில மழை ஜாஸ்தியா, இல்ல உள்ளேயா?" ஆளுக்கு ஒரு பக்கெட் எடுத்து கொண்டு ராஜ்ஜிய பங்கீடு செய்வோம். "டேய், இன்னிக்கு நீதான்டா ஹாலுக்கு" . சிமெண்ட் செலவு மிச்சம் செய்தது எல்லாம் பக்கெட் வாங்கியே போய் சேர்ந்தது. "பிலாச்டீக் சாமான் விக்கருதே... ..." ஆள் எப்பவும் எங்க வீட்டு வாசலில்தான் நடையாய் நடப்பார். தாத்தாவுக்கு அவனை பார்த்தால் கடும் கோபம் வரும். "ஏலே, நேத்துதானே பத்து பக்கெட் வாகினோம், இப்ப திருப்பி வாரியே? ஜோலிய பாத்துட்டு போவியா?"
பல வருஷம் என் அண்ணன் இந்த வீட்டுக்கு modification செய்தே பல லட்சம் கோட்டை விட்டான். "சம்பாதித்து பொறுப்பாக வீட்டை பார்த்துக்கோ" என்பதை என் அண்ணன்தான் சரியாக நிறைவேற்றியிருப்பாராக இருக்கு ம். கடைசியாக ஒரு நாள் ஒரு bulldozer எடுத்து வந்து மொத்தமாக தகர்த்து விட்டு முழுசாக மறுபடி வீடு கட்டினோம் பிறகு. மேஸ்திரியின் ஆவி பாத்திருந்தால் எங்களை எல்லோரையும் அறைந்திருக்கும். நல்ல வேளை - எங்கள் வீட்டு வாசல் துர்க்கை அம்மன் கோயிலில் வசிக்கும் professional spirit driver (பேய் ஓட்டுபவர் - பெயர் : வேதாளசலம், sorry வேதாசலம் ) எங்களை காப்பாற்றினார்.
மேஸ்திரிகளும், பக்கெட் விற்பவர்களும் - எங்கிருந்தாலும் வாழ்க!
தாத்தா கார்டூன் சூப்பர். அந்த 'சறுக்கு மரம்' பத்தி நீ எழுதலையே. நல்ல காமெடி. வைபவியிடம் சறுக்கு மரம், வீட்டுக்குள் கொத்தமல்லி செடி வளர்த்தது, மாடிப் படிக்கு அவரின் பிரில்லியண்ட் ஐடியா எல்லாம் சொல்லி சிரித்து மகிழ்ந்தோம்.
ReplyDeletedo you still have those caricatures?
ReplyDeleteபடம் நீங்க வரைஞ்சதா?
ReplyDeleteகாமெடி மெய்யாலுமே நல்லா க்கீதுப்பா... ;-))
namma veettu tharaila chithi thanni thelichi kothamalli chedi vachathai yezhudhalaye?
ReplyDelete-Ladha