Thursday, August 4, 2011

நாஷ்டா துண்ணியா?

மெட்ராஸ் பாஷையில் பல வார்த்தைகள் எங்கேயிருந்து தோன்றின என்று கண்டேபிடிக்க முடியாது. டபாய்த்தல், கலாய்தல், டுபாகூர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சில double stress வார்த்தைகளும் உண்டு. "சாரி மன்ச்சிகங்கனா" "மேட்டரு விஷயமா பேசனுன்னா " "எனுக்கு நாபக மெமரி கொஞ்சம் கம்மின்னா" "தப்பா மிஷ்டீக் ஆயிட்சுபா" என்று.

இங்கு சப்ஜெக்ட் மேட்டர், மெட்ராஸ் தமிழல்ல. நாஷ்டா. சாரி மன்ச்சிகங்க. தப்பா மிஷ்டீகாயிடிச்சி .

இந்த நாஷ்டா இரண்டு வகையிலும் சேரும். அதாவது எங்கிருந்து தோன்றியதும் தெரியாது (திருவள்ளுவர் சத்தியமாக நாஷ்டா துண்ணிருக்க மாட்டார்) அதோடு "நாஷ்டா டிபனு துண்ணியா" என்கிற double stressம் உண்டு.

நானிருக்கும் துபாயில் இந்த நாஷ்டா பரபரப்பு மிக அதிகம். குறிப்பாக weekend சமயங்களில்.

எல்லா மக்களும் ஹோட்டலில்தான் ஆர்டர் செய்வார்கள். வீட்டில் காப்பி போட்டாலே பெரிய விஷயம். ஒரு பத்து நிமிடம் தாமதமாக எழுந்தால் துபாயில் நாஷ்டா காலியாகிவிடும்.

: அய்யய்யோ, இப்பதானே இட்லி குளோசாச்சு.. சாதா தோசை ஒன்னு எக்ஸ்ட்ரா போட்டுறவா? அடடா அதுவும் அரைதான் மாவு இருக்காம்..

: சாம்பார் காலி சார். சட்னி தண்ணியா அனுப்பிடட்டா?

இதெல்லாம் decent சமாளிப்புகள். சில சமயம் ஆர்டர் எடுப்பவர்கள் என்னை மாதிரி ரெகுலர் கஸ்டமர்களுக்கு (அதாவது நாஷ்டா, லஞ்ச், snacks, dinner எல்லாம் வாங்குபவர்) ஒரு எக்ஸ்ட்ரா மைல் செல்வார்கள்.

: அய்யய்யோ, கடைசி இட்லி இப்பதானே வாயில போடறாரு..கொஞ்சம் முன்னாடி போன் பண்ண மாட்டிங்களா சார்... (சாப்பிட்டு கொண்டிருப்பவர் சட்டென்று எல்லா இட்லியும் வாயில் அடைத்துக்கொள்வார். புரையேறி திண்டாடுவார். ஒரே இருமல் சத்தமாக இருக்கும். "ஒரு தண்ணி குடுப்பா" என்று கூச்சல் கேட்கும். "தண்ணி கூடவா ஆர்டர் பண்றாங்க இப்பல்லாம்" என்று கிச்சனிலிருந்து ஒரு ஆச்சரிய குரல் கேட்கும். "அட நீ வேற, இங்கேபா")

: டேய், ரெகுலர் கஸ்டமர் தோசை கேட்கராருடா.. அதோ அந்த ஆளை கொஞ்சம் நிறுத்து.. சார், தோசை சரியில்லை பார்சல்லே.. ரிடர்ன் பண்ணிட்டு சப்பாத்தி போட்றவா? (அட வேணாம் போயா. போன வாட்டி இதே மாதிரிதான் பூரிக்கு பதிலா லெமன் ஜூஸ் கொடுத்தே..)

: டேய், அந்த பொங்கல் பிளேட்டை அப்படியே அந்த கண்ணாடி பார்ட்டிக்கு தெரியாம பார்சலுக்கு அனுப்பிடு.. கண்ணாடி பார்ட்டிக்கு ஒரு கத்திரிக்கா ஊத்தப்பம் போட்டுரு..

இந்த நாஷ்டா விவகாரம் ஒரு பெரிய task மாதிரி. பல பேர் weekend காலையில் எதையும் கமிட் பண்ணமாட்டார்கள்.

: ஒன்னு பண்ணறேன்.. நாளைக்கு breakfast கிடைச்ச அப்புறம் போன் பண்றேன் ஓகேவா? கரெக்டா டைம் சொல்ல முடியாது இப்போ.. என் பையன் வேற பூரிக்கு பாஜிதான் வேணும்னு அடம் புடிக்கிறான். அட்ஜஸ்டே பண்ண மாட்டானுங்க இந்த காலத்து பசங்க...

: வீட்டிலே அவரு இல்லே.. ஆபீஸ் டூர் போயிருக்கார். இந்த வாரம் உங்க husband கொஞ்சம் பிரேக் பாஸ்டுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? (husband அலறி அடித்து அவரும் ஆபீஸ் டூர் போய்விடுவார். "ஒரு வேளை நம்மளையே சமைக்க சொல்றாங்களோ?")

ஒரு சில ஹோட்டல் அதிபர்கள் இந்த நாஷ்டா தொல்லை தாங்காமல் வீட்டிற்க்கே சமையல் ஆட்களை அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் பின்னால் பிராப்ளம் வந்து விட்டது.

: என்ன சார், கணேசனை எப்பவும் அந்த B பளாக்குக்கே அனுப்பறீங்க ... இந்த முருகேசனுக்கு தயிர் சாதத்தை விட்டா ஒண்ணுமே பண்ண தெரியலே..

: எங்க husbandக்கு ஷுகர்.. காலையிலே நாலு மணிக்கே அவருக்கு தோசை சாப்பிடனும்.. ஒரு மூணரைக்கு செந்திலை அனுப்ப முடியுமா?

: அந்த மாணிக்கத்தையே அனுப்புங்க.. பசங்களுக்கு அவன்தான் நல்லா புக் அட்டை போட்டு தரான்..

இப்படியாக சில பல எக்ஸ்ட்ரா ரிக்வேஸ்டுகள் வரத்தொடங்கின. பல ஹோட்டல் அதிபர்கள் தொல்லை தாங்காமல் stationery கடை திறந்து ஹோட்டல் பிசினஸ் போதுண்டா அப்பா என்று ஓடி விட்டார்கள்.

வாங்க வாங்க துபாய்க்கு வாருங்க.. ஆனா இந்த நாஷ்டா மட்டும் கியாரண்டீ தர முடியாது சார். மேட்டரு விஷயம் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன். சாரி மன்ச்சிகங்க.

----------------------------------------------------------------------------------------

3 comments:

  1. நல்ல காமெடி. சரவண பவன், சங்கீதா எல்லாம் துபாயில் இருப்பதால் என்சாய் பண்ணுங்க. குவைத்தில் வெளியில் போனால் 'பட்டர் நான்' தான். அதை பிரேக் ஃபாஸ்ட்டுக்கா, லன்சுக்கா இல்ல டின்னருக்கா என்று முடிவு செய்யும் கட்டாயத்தில் இருக்கோம். என்ன செய்ய.

    ReplyDelete
  2. துபாய்ல இப்படியெல்லாம் அனுபவமா...அட...

    ReplyDelete
  3. சிரிச்சு மாளலப்பா.

    ReplyDelete