
எங்கள் காலத்தில் (அதாவது 80 களில்) ஏதாவது கல்யாணம் வந்தால் ஆவலோடு எதிர் பார்ப்போம். பல உறவினர்கள் பார்க்க பேச கிடைப்பார்கள்.
இன்று மக்கள் நிறைய மாறி விட்டார்கள். அய்யோ கல்யாணமா? எப்போ? என்கிறார்கள். கூட்டத்தை எப்படி avoid செய்வது என்பதற்கு பல techniq கள் வந்து விட்டன. அவற்றுள் சில இதோ:
என் கசினின் கணவர் (க க என்று அழைக்கலாம் இனி அவரை) இதில் எக்ஸ்பெர்ட். கல்யாண குரூப்புகளை avoid செய்வதற்கு பல உபாயங்கள் வைத்திருப்பார்.
தன் 5 வயது மகனை அழைத்து: டேய், அங்க ஒரு அஞ்சாறு அங்கிள் ஆன்ட்டி நிக்கறாங்க. நீ என்ன பண்ணனும்? என் முன்னாடி வேகமா ஒடணும். அப்படியே அவங்களை கிராஸ் பண்ணி அந்த கடைசி ரூமுக்குள்ள போயிடனும். நான் உன்னை துரத்திண்டே அவங்களை கிராஸ் பண்ணிடுவேன். சரியா? சமத்து இல்லே?
பயல் ஓட ஆரம்பிப்பான். க க பின்னால் பறப்பார்.
: டேய், டேய், நில்லுடா. ஓடாதே.. சொன்னா கேளுடா..
பயல் சரியாக அங்கிள் ஆன்ட்டிகள் அருகே பிரேக் போட்டு நிற்பான். கோபமாய் திரும்பி "நீதானப்பா ஓட சொன்னே? இப்போ இப்படி சொல்றே?" என்பான். க க தடுமாறி வியர்த்து விறு விறுப்பார். அங்கிள் ஆன்ட்டி எல்லோரும் உடனே அவரை விநயம் விசாரிப்பார்கள். என்ன நீ க சௌக்கியமா? அப்புறம் என்ன விஷயம்? என்று ஒரு அரை மணி நேரம் மொக்கை போடுவார்கள்.
க க ஹீ ஹீ என்று இளித்து நைசாக நழுவுவார். பயலுக்கு சில பல தரும அடிகள் விழும் பிறகு. பாவம்.
எனது இன்னொரு உறவினர் செல் போன் வைத்து தப்பிப்பார். பின்னால் ஏதாவது நிழல் ஆடினால் உடனே செல் போன் எடுத்து : ஆங் சொல்லுடா சரவணா ... அந்த file ஆ? மேனேஜர் கேட்டாரா? என்னோட ரெண்டாவது கப் போர்டில் இருக்கப்பா. என்னது? ஒரு எழவும் சரியா காதில விழலை இந்த கல்யாண சத்தத்துலே (மங்களகரம்!) .. இரு.. இரு.. வெளிலே வரேன். - என்று சொல்லி கழண்டு விடுவார்.
இதில் மிக பெரிய கில்லாடி ஒருவர் இருக்கிறார். எந்த கல்யாணத்திலும் செய்கையில்தான் பேசுவார். மௌன விரதம் என்று வாய் மேல் ஒரு கை வைத்து அதற்கு மேல் இன்னொரு கை வைத்து காட்டுவார். அவர் காலை தூக்கி வாயில் வைப்பதற்கு முன் கழலுதல் நலம். தொண்டை ஆபரேஷன் என்று கையால் பல முறை அறுத்து காண்பிப்பார் சில சமயம் (ஏண்டா கழுத்தறுக்கிறீங்க என்றும் புரிந்து கொள்ளலாம்). மற்றொரு சமயம் பெரிதாக இருமி நகர்ந்து விடுவார். எல்லோரும் நம்மை சந்தேகமாக பார்ப்பார்கள். நடுவில் அவரது சின்ன பையன் வந்து - அப்பா, மாத்திரை சாப்டியா என்று extra scene சேர்ப்பான். கடந்த பன்னிரண்டு வருடத்தில் இன்று வரை அவரிடம் என்னால் பேச முடியவில்லை.
இன்னொரு மனிதர் எந்த கல்யாணத்திலும் நேராக ஒரு trance இல் வருவார். ஏதோ ஸ்லோகத்தை (அப்படித்தான் நான் நினைத்தேன்) முணு முணுத்து கொண்டே உள்ளே நுழைந்து சாப்பிட்டு விட்டு பின் பக்கமாக சென்று விடுவார். என் கசின் அவர் பின்னாலேயே போய் கூர்ந்து கவனித்து வருவான் - டேய், .. ஸ்லோகமெல்லாம் இல்லைடா. ஆசாமி 5 tables சொல்றார்டா. அதுவும் ஒரே தப்பு.
இந்த பழகோபோபியா பிரச்சினை தவிற்பதற்கு இப்போதெல்லாம் ரிசப்ஷனுக்கு லைட் மியூசிக் போட்டு ஆட விட்டு விடுகிறார்கள். வரும் மக்கள் நேராக டான்சில் கலந்து கொண்டு யாரையும் பார்க்காத படி கண்ணை மூடி ஆட்டம் போடுகிறார்கள். சிறுது நேரத்தில் மூச்சு வாங்கி கொண்டே "டயர்டுப்பா .. சாப்பிடலாம்" என்று ஆடி கொண்டே பறந்து விடுகிறார்கள்.
போகிற போக்கில் இந்த தனியோமேனியா ஆட்களுக்காகவே face book லேயே கல்யாணம் நடத்துவார்கள் போலிருக்கிறது. ஆளுக்காள் ஒரு கமெண்ட் சொல்லி யாரும் யாரையும் பார்க்காமல் முடித்து விடலாம்.
கார்த்திக் says - கல்யாணம் முடிந்தது. காலில் விழுகிறோம்...
யாரு திருடனா?
ReplyDelete/*யாரு திருடனா? */
ReplyDeleteis this some kind of clue?? for the next post??
Na Ka yean ka ka nu marithu? Na ka vum famous annum illa?
ReplyDeleteNa Ka