Friday, March 11, 2011

கொஞ்சம் செலவாவும் பரவாயில்லையா?


என் நண்பன் துபேல் போல் நான் ஒரு ஹுமொரிஸ்ட் இதுவரை பார்த்ததில்லை.

அவனுடைய சில கமெண்ட்ஸ் இதோ:

- அவரே பாவம் handicraft வுட்டுருபா .. நடக்க முடியாது இல்ல?

- சரவணா பவனில் நுழைந்து : மூணு பேருக்கு எடம் வேணும்.
உட்கார்ந்ததும்: கொலை பசி . நாலு unlimited மீல்ஸ் கொடுப்பா

- தியேட்டரில்: வடிவேலை பார்த்து - ஆ கவுண்டமணி!
பின்னால் டென்ஷன் பார்ட்டி: ஆலோ அது வடிவேலு. பார்த்தா தெரியலே? வந்துட்டானுங்க ...

துபேல் ஒரு படு கூல் பேர்வழி. எந்த மேட்டர் (பழைய தமிழ் : விஷயம்) இருந்தாலும் மக்கள் அவனிடம் வருவார்கள்.

: அண்ணா ஒரு பத்தாயிரம் பணம் நிக்குது ஒரு ஆளுகிட்ட .. எப்படியாச்சும் நீங்கதான் வாங்கி தரனும்,
: ஆங் பண்ணிடலாம். கொஞ்சம் செளுவாவும் பரவாயில்லையா?
: பண்ணிடல்லாம் அண்ணே.. எவ்ளோ?
: ஒரு இருவத்தஞ்சு ஆயிரம் ஆகும் ஓகேவா?
: அட போங்கண்ணே..

ஒரு முறை நாங்கள் டீ கடையில் அரட்டையில். செல் போன் அலறுகிறது. துபேல் எடுக்கிறான்: ஆலோ, ஆங் சொல்லுப்பா. என்னாது? டிராபிக் போலீஸ் கையிலே மாட்டிக்கினியா? எங்க? dms கிட்டேயா. இன்னா சொல்றான்? இன்னாது? பைனா? ஆயிரமா? இன்னா விளையாடறியா? நம்ம வெயிட்டு தெரியும்ல? நீ எதுவும் பேசிக்காத. அங்கியே நில்லு. நான் ஆளுங்களோட வரேன்.

: சரின்னா. சீக்கிரம் வாங்க.

உடனே நாங்கள் ஏழு பேர் 3 பைக்கில் பறந்தோம். dms அருகில் கையை பிசைந்து கொண்டு சலீம். எங்களை பார்த்ததும் ஓடி வருகிறான்: வாங்கன்னே.
: எங்கடா வண்டி?
: ஸ்டேஷன் லே அண்ணே..
: ஒன்னியும் வொர்ரி பண்ணிக்காத. நாங்க இருக்கோம் இல்லே. ஏன்னா பேரு சொன்னான்?
: ஏதோ ஷேம்ஸ் ஆமில்ல?
: டே ஜேம்ஸ் டா. சரி. அத்த விடு. பசங்க எல்லாம் பாவம். சரியான பசியிலே இருக்கானுங்க. கொஞ்சம் டிபன் சாப்டுட்டு ஸ்டேஷன் போலாம்.

ஹோட்டல் நுழைந்து ரணகளம். பில் 720 ரூபாய்.
: டே சலீம். பே பண்ணிடுவ இல்ல?
சலீம் முழிக்கிறான்: சரிண்ணே.

பாண் கடையில் : சலீம். அப்படியே ஒரு நாலு மீட்டா ஒரு 120 எடுத்துக்க. போ சொல்ல வேணும்.
சரிண்ணே.

ஸ்டேஷன் உள்ளே:

: ஆலோ யாருங்க இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ்?
ஒரு ஆறடி பை நாலடி இன்ஸ்பெக்டர் முகத்தில் அரையடி மீசையுடன்: நான் ஜேம்ஸ் இல்லனா எங்கிட்ட பேச மாட்டீகளோ?
: என்ன அண்ணே. அப்டி சொல்றிங்க. ஏதோ பைன் போட்டிங்கலாமே? பையன் நம்ம பையன்.
: நோ பார்கிங் ல வண்டி. 1000 ரூபா கட்டிட்டு வண்டி எடுத்து போய்கிட்டே இருங்க. எனக்கு ஆயிரம் வேலை.
: என்ன அண்ணே. நீங்களே இப்டி சொன்னா எப்டி? பையன் ரொம்ப கஷ்டத்துல இருக்கான்..
: அப்போ பஸ் ல போ சொல்லு. பைக்கு ரொம்ப தேவையா?
: ஓகே சார். கட்சியா என்ன சொல்றிங்க?
: 1000 ரூபா.
: டே சலீம். இங்க வாடா.
: என்ன அண்ணே?
: நோ பார்கிங் ல வண்டி வுட்டியா?
: ம்ம்ம் ஆமாண்ணே.
: டே அறிவு இருக்கா உனுக்கு? வண்டி வாங்கிட்டா போறுமா? 1000 வச்சிருக்கியா? எடு.
: இதோன்னே.
: சார். வாங்கிகிட்டு ஒரு ரெசிப்ட் குடுங்க சார்.
: சரி. சரி. அந்தாள் கிட்டே கட்டி வாங்கிக்க.
: டே சலீம். கட்டிட்டு வா. நான் வெளிலே நிக்கறேன். சார். ரொம்ப தேங்க்ஸ். வரட்டா?

சலீம் 1000 கட்டி விட்டு வெறியோடு வெளியே வருகிறான்.
: என்ன அண்ணே. அப்பவே கட்டிருந்தா செலவாவுது கம்மி ஆயிருக்கும்.
: டே. இதல்லாம் ரூல்ஸ் டா. ஒன்னும் பண்ண முடியாது. அடுத்த வாட்டி திரும்ப வாங்கிக்கலாம். சரி. சத்யம் ல படம் வரியா?

சலீம் ஓடுகிறான்.

1 comment:

  1. சரவணபவன் கடி நல்ல வெடி.
    வடிவேலு சுத்தமா புரியலபா.

    ReplyDelete